1076

பொருட்பால்

கயமை

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

Araiparai Annar Kayavardhaam Ketta

Maraipirarkku Uyththuraikka Laan

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை

தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

பரிமேலழகர் உரை

தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர். (மறை

மணக்குடவர் உரை

கயவர் அறையும் பறைபோல்வர்; தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான். இஃது அடக்கமில ரென்றது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.

Translation

The base are like the beaten drum; for, when they hear The sound the secret out in every neighbour's ear.

English Couplet

The base are like the beaten drum; for, when they hearThe sound the secret out in every neighbour's ear