1105

காமத்துப்பால்

புணர்ச்சி மகிழ்தல்

வேட் ட பொழுதின் அவையவை போலுமே

தோட் டார் கதுப்பினாள் தோள்.

Vetta Pozhudhin Avaiyavai Polume

Thottaar Kadhuppinaal Thol

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

சாலமன் பாப்பையா உரை

நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

கலைஞர் மு.கருணாநிதி உரை

விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.

பரிமேலழகர் உரை

(தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது) வேட்ட பொழுதின் அவையவை போலுமே - மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவை தாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் - எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலின் யுடையாள் தோள்கள். (தோடு

மணக்குடவர் உரை

காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும், தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள். தோட்டாழ்கதுப்பு- புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

எப்போது புணர்ந்தாலும் பூவினையணிந்த தழைத்த கூந்தலையுடைய இவளுடைய தோள்கள் விரும்பிய பொருள்கள் எல்லாம் விரும்பியபோது தாமே வந்து இன்பம் செய்வதுபோல இன்பம் செய்கின்றன.

🌏 English Translations & Explanations

Explanation

The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).

Translation

In her embrace, whose locks with flowery wreaths are bound, Each varied form of joy the soul can wish is found.

English Couplet

In her embrace, whose locks with flowery wreaths are bound,Each varied form of joy the soul can wish is found