1116

காமத்துப்பால்

நலம் புனைந்து உரைத்தல்

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்.

Madhiyum Matandhai Mukanum Ariyaa

Padhiyin Kalangiya Meen

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

சாலமன் பாப்பையா உரை

அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.

பரிமேலழகர் உரை

(இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன. (ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.).

மணக்குடவர் உரை

மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள். மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கு மென்று கூறியது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.

Translation

The stars perplexed are rushing wildly from their spheres; For like another moon this maiden's face appears.

English Couplet

The stars perplexed are rushing wildly from their spheres;For like another moon this maiden's face appears