1131

காமத்துப்பால்

நாணுத் துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடலல்லது இல்லை வலி.

Kaamam Uzhandhu Varundhinaarkku Emam

Matalalladhu Illai Vali

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.

பரிமேலழகர் உரை

[அஃதாவது , சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் தோழிக்குத் தன் நாண் துறவு உரைத்தலும் , அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் அவட்குத் தன் நாண் துறவு உரைத்தலும் ஆம் . இது காதல் மிக்குழி நிகழ்வது ஆகலின் , காதற்சிறப்புஉரைத்தலின் பின் வைக்கப்பட்டது.] (சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை. (ஏமமாதல்

மணக்குடவர் உரை

காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தம் காதலியோடு காமத்தினை அனுபவித்துப் பின்பு அது பெறாமல் இருக்கும் ஆடவர்க்கு பழங்காலந்தொட்டு வருகின்ற பாதுகாப்புமுடன் அல்லாமல் வேறு எதுவுமில்லை.

🌏 English Translations & Explanations

Explanation

To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.

Translation

To those who 've proved love's joy, and now afflicted mourn, Except the helpful 'horse of palm', no other strength remains.

English Couplet

To those who 've proved love's joy, and now afflicted mourn,Except the helpful 'horse of palm', no other strength remains