1142

காமத்துப்பால்

அலர் அறிவுறுத்தல்

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

Malaranna Kannaal Arumai Ariyaadhu

Alaremakku Eendhadhiv Voor

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

சாலமன் பாப்பையா உரை

மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை

மணக்குடவர் உரை

பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார். எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

மலர்போன்ற கண்ணினையுடைய இப்பெண்ணின் அருமையினை அறிந்து கொள்ளாமல் இவ்வூர் அப்பெண்ணை எளியவளாகக் கருதி அலர் கூறுவதைச் செய்தது.

🌏 English Translations & Explanations

Explanation

Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.

Translation

The village hath to us this rumour giv'n, that makes her mine; Unweeting all the rareness of the maid with flower-like eyne.

English Couplet

The village hath to us this rumour giv'n, that makes her mine;Unweeting all the rareness of the maid with flower-like eyne