காமத்துப்பால்
பிரிவு ஆற்றாமை
Ompin Amaindhaar Pirivompal Matravar
Neengin Aridhaal Punarvu
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.
காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்.
(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்
காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
எனது உயிர்போகாமல் காப்பாற்ற வேண்டுமானால் அதற்குரிய தலைவர் பிரிந்து செல்லாமல் நிறுத்துவாயாக, நிறுத்துவாரின்றி அவர் சென்றுவிட்டால் என்னுயிரும் செல்லும். பின்பு அவரைக் கூடுதல் முடியாததாகும்.
If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.
If you would guard my life, from going him restrain Who fills my life! If he depart, hardly we meet again.
If you would guard my life, from going him restrainWho fills my life! If he depart, hardly we meet again