1159

காமத்துப்பால்

பிரிவு ஆற்றாமை

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

Thotirsutin Alladhu Kaamanoi Pola

Vitirsutal Aatrumo Thee

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

சாலமன் பாப்பையா உரை

தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!.

பரிமேலழகர் உரை

(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது. (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்

மணக்குடவர் உரை

தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ. தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தீயானது தன்னைத் தொட்டவரைத்தான் சுடும், காமமாகிய நோய்போலத் தன்னைவிட்டு நீங்கினால் சுடுகின்ற தன்மை உடையதோ?.

🌏 English Translations & Explanations

Explanation

Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?.

Translation

Fire burns the hands that touch; but smart of love Will burn in hearts that far away remove.

English Couplet

Fire burns the hands that touch; but smart of loveWill burn in hearts that far away remove