காமத்துப்பால்
கண் விதுப்பழிதல்
Therindhunaraa Nokkiya Unkan Parindhunaraap
Paidhal Uzhappadhu Evan?
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?.
விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?.
(இதுவும் அது.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? (விளைவது
முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு? இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது.
பின்னே விளைவதனை ஆராய்ந்தறியாமல் அன்று காதலரை நோக்கிய கண்கள் 'இத்துன்பம் நம்மால்தானே வந்தது' என்று பொறுத்திருப்பதை அறியாமல் வருத்தமுறுவது எதனைக் கருதி?.
The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).
How glancing eyes, that rash unweeting looked that day, With sorrow measureless are wasting now away!.
How glancing eyes, that rash unweeting looked that day,With sorrow measureless are wasting now away