அறத்துப்பால்
நடுவு நிலைமை
Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa
Utkottam Inmai Perin
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
செப்பம் சொற்கோட்டம் இல்லது - நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் (சொல்
நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்
நடுவு நிலைமை என்பது சொல்லுகிற சொல்லிலில் கோணுதல் இல்லாமல் இருத்தலாகும். மனத்தினிடத்தில் கோணுதல் இல்லாமலிருப்பதைத் திண்ணியதாகப் பெற்றிருந்தால் அதுவும் நன்மை பயப்பதாகும்.
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.
Inflexibility in word is righteousness, If men inflexibility of soul possess.
Inflexibility in word is righteousness,If men inflexibility of soul possess