1191

காமத்துப்பால்

தனிப்படர் மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி.

Thaamveezhvaar Thamveezhap Petravar Petraare

Kaamaththuk Kaazhil Kani

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

சாலமன் பாப்பையா உரை

தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.

பரிமேலழகர் உரை

[அது , தனியாகிய படர் மிகுதி என விரியும் .அஃதாவது , படர் மிகுதி தலைவன்கண் இன்றித் தன்கண்ணதேயாதல் கூறுதல் .அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் , அவன்கண் இல்லையாயிற்று . இது , பசப்புற்று வருந்தியாட்கு உரியதாகலின் , பசப்புறு பருவரலின் பின் வைக்கப்பட்டது.] ('காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர், நீ அவரோடு பேரின்பம் நுகர்தி', என்ற தோழிக்குச் சொல்லியது.) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்; பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காம நுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை. (காமம்

மணக்குடவர் உரை

தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர். இது தடையின்றி நுகரலாமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தம்மால் விரும்பிக் காதலிக்கப்பட்ட தலைவரால் விரும்பப்பட்ட தலைவியர் காம அனுபவம் எனப்படும் வித்தில்லாத கனியினைப் பெற்றவராவர்.

🌏 English Translations & Explanations

Explanation

The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ? .

Translation

The bliss to be beloved by those they love who gains, Of love the stoneless, luscious fruit obtains.

English Couplet

The bliss to be beloved by those they love who gains,Of love the stoneless, luscious fruit obtains