காமத்துப்பால்
நினைந்தவர் புலம்பல்
Ninaippavar Pondru Ninaiyaarkol Thummal
Sinaippadhu Pondru Ketum
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.
எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?.
வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?.
(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும். (சினைத்தல்
அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ
எனக்குத் தும்மலானது வருவது போலிருந்து வராமல் போகின்றது. அதனால் காதலர் என்னை நினைப்பார்போல இருந்து நினைக்க மாட்டாரோ?.
I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.
A fit of sneezing threatened, but it passed away; He seemed to think of me, but do his fancies stray?.
A fit of sneezing threatened, but it passed away;He seemed to think of me, but do his fancies stray