காமத்துப்பால்
நினைந்தவர் புலம்பல்
Vitaaadhu Sendraaraik Kanninaal Kaanap
Pataaadhi Vaazhi Madhi
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.
(வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) மதி-மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக. (கண்ணளவான் எதிர்ப்படுதலாவது
என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி. பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.
மதியே! எனது நெஞ்சத்தில் எப்போதும் இருந்துவிட்டுப்போன காதலரை யான் என் கண்ணினாலேனும் காணுகின்ற வரையில் நீ மறையாமல் இருப்பாயாக
May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.
Set not; so may'st thou prosper, moon! that eyes may see My love who went away, but ever bides with me.
Set not; so may'st thou prosper, moon! that eyes may seeMy love who went away, but ever bides with me