1232

காமத்துப்பால்

உறுப்புநலன் அழிதல்

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண்.

Nayandhavar Nalkaamai Solluva Polum

Pasandhu Panivaarum Kan

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை

பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) பசந்து பனி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நமமால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும். (சொல்லுவ போறல்

மணக்குடவர் உரை

முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பசப்பு நிறமடைந்து நீர் பொழுகின்ற கண்கள் தம்மால் அன்பு செய்யப்பட்டவரது அன்பில்லாத் தன்மையினைப் பிறர்க்குச் சொல்லுவனபோல் இருக்கின்றன.

🌏 English Translations & Explanations

Explanation

The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.

Translation

The eye, with sorrow wan, all wet with dew of tears, As witness of the lover's lack of love appears.

English Couplet

The eye, with sorrow wan, all wet with dew of tears,As witness of the lover's lack of love appears