1267

காமத்துப்பால்

அவர்வயின் விதும்பல்

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்அன்ன கேளிர் விரன்.

Pulappenkol Pulluven Kollo Kalappenkol

Kananna Kelir Viran

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?.

சாலமன் பாப்பையா உரை

கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின், புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ; புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? (புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை

கண்போற் சிறந்தகேளிர் வருவாராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக் கடவேனோ

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

கண்போல் சிறந்த தலைவர் வருவாராயின் அவர் நீண்ட நாட்களாக வாராமையினைக் கருதிப் புலந்து கொள்ளுவேனோ? அல்லது பொறுக்க முடியாமையினை எண்ணிப் புலக்கக் கடவேனோ?. அவ்விரண்டினையும் செய்யக் கடவேனோ? யாது நான் செய்யக் கடவேன்.

🌏 English Translations & Explanations

Explanation

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

Translation

On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?.

English Couplet

Shall I draw back, or yield myself, or shall both mingled be,When he returns, my spouse, dear as these eyes to me