1285

காமத்துப்பால்

புணர்ச்சி விதும்பல்

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து.

Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan

Pazhikaanen Kanta Itaththu

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை

முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் - முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன். (கோல்

மணக்குடவர் உரை

கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போலக் கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன். இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

கண்களுக்கு மையெழுதும்போது அஞ்சனக் கோலின் இயல்பினைக் காண முடியாத கண்ணேபோல, கணவனை நேரில் கண்டபோது அவரது தவறுகளைக் காணமாட்டேன்.

🌏 English Translations & Explanations

Explanation

Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.

Translation

The eye sees not the rod that paints it; nor can I See any fault, when I behold my husband nigh.

English Couplet

The eye sees not the rod that paints it; nor can ISee any fault, when I behold my husband nigh