195

அறத்துப்பால்

பயனில சொல்லாமை

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

Seermai Sirappotu Neengum Payanila

Neermai Yutaiyaar Solin

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

பரிமேலழகர் உரை

பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை

மணக்குடவர் உரை

பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

நற்குணமுடைய இனிய தன்மை வாய்ந்த பெரியோர்கள், பயனில்லாத சொற்களைச் சொன்னால் அவர்களுடைய மேன்மையும் நன்மதிப்பும் நீங்கிவிடும்.

🌏 English Translations & Explanations

Explanation

If the good speak vain words their eminence and excellence will leave them.

Translation

Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense.

English Couplet

Gone are both fame and boasted excellence,When men of worth speak of words devoid of sense