447

பொருட்பால்

பெரியாரைத் துணைக்கோடல்

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.

Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare

Ketukkun Thakaimai Yavar

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை

தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?.

பரிமேலழகர் உரை

இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்? (தீயன

மணக்குடவர் உரை

குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர். இது கேடில்லை யென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் தன்மையுடைய பெரியார்களை, இவர்கள் தமக்குச் சிறந்தார் என்று கொள்ளுபவர்களைக் கெடுக்கும் பெருமையுடைய பகைவர் யாவர் உளர்?.

🌏 English Translations & Explanations

Explanation

Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?.

Translation

What power can work his fall, who faithful ministers Employs, that thunder out reproaches when he errs.

English Couplet

What power can work his fall, who faithful ministersEmploys, that thunder out reproaches when he errs