449

பொருட்பால்

பெரியாரைத் துணைக்கோடல்

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.

Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch

Aarpilaark Killai Nilai

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

பரிமேலழகர் உரை

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை. (முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை

மணக்குடவர் உரை

முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

முதற்பொருள் இல்லாத வணிகர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாகும். அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணை இல்லாதவர்களுக்கு அதனால் வரும் உறுதியான நிலை இல்லையாகும்.

🌏 English Translations & Explanations

Explanation

The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

Translation

Who owns no principal, can have no gain of usury; Who lacks support of friends, knows no stability.

English Couplet

Who owns no principal, can have no gain of usury;Who lacks support of friends, knows no stability