456

பொருட்பால்

சிற்றினம் சேராமை

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.

Manandhooyaark Kechchamnan Raakum Inandhooyaarkku

Illainan Raakaa Vinai

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

பரிமேலழகர் உரை

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை. (காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.) .

மணக்குடவர் உரை

மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

மனம் தூய்மையானவர்களுக்கு எஞ்சி நிற்பதாகிய எச்சம் சிறப்பானதாக அமையும். இனம் தூய்மையானவர்களுக்கு நன்றாகாத செயல் எதுவுமே இல்லை.

🌏 English Translations & Explanations

Explanation

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

Translation

From true pure-minded men a virtuous race proceeds; To men of pure companionship belong no evil deeds.

English Couplet

From true pure-minded men a virtuous race proceeds;To men of pure companionship belong no evil deeds