458

பொருட்பால்

சிற்றினம் சேராமை

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து.

Mananalam Nankutaiya Raayinum Saandrorkku

Inanalam Emaap Putaiththu

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.

பரிமேலழகர் உரை

மனநலம் நன்கு உடையராயினும் மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து அமைந்தார்க்கு இனநன்மை அதற்குவலியாதலையுடைத்து ('நன்கால்' என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.

மணக்குடவர் உரை

மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து. இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

மனம் நன்றாக இருப்பதனை நல்லபடியாகத் தாமே தம் பிறவியிலேயே உடையவராக இருந்தாலும், நிறைகுணம் பெற்ற பெரியோர்களுக்கு சேர்ந்த இனம் நன்றாக இருப்பது, காப்பான வலிமை உடையதாகும்.

🌏 English Translations & Explanations

Explanation

Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.

Translation

To perfect men, though minds right good belong, Yet good companionship is confirmation strong.

English Couplet

To perfect men, though minds right good belong,Yet good companionship is confirmation strong