469

பொருட்பால்

தெரிந்து செயல்வகை

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.

Nandraatra Lullun Thavuruntu Avaravar

Panparin Thaatraak Katai

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை

அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

பரிமேலழகர் உரை

நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின். (நன்றான உபாயமாவது

மணக்குடவர் உரை

நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து. இதுவுமோரெண்ணம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

அவரவர் குணங்களை ஆராய்ந்து அவற்றிற்கேற்பச் செய்யாமற் போனால், பிறர்க்கு நல்லவற்றையே செய்தாலும் குற்றம் உண்டாகிவிடும்.

🌏 English Translations & Explanations

Explanation

There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.

Translation

Though well the work be done, yet one mistake is made, To habitudes of various men when no regard is paid.

English Couplet

Though well the work be done, yet one mistake is made,To habitudes of various men when no regard is paid