483

பொருட்பால்

காலமறிதல்

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அற஧ந்து செயின்.

Aruvinai Yenpa Ulavo Karuviyaan

Kaalam Arindhu Seyin

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

சாலமன் பாப்பையா உரை

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

பரிமேலழகர் உரை

அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன

மணக்குடவர் உரை

அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

அவற்றை முடித்ததற்கு ஏற்ற கருவிகளுடனே காலமறிந்து செய்வாராயின், செய்வதற்கு அருமையான தொழில்கள் என்று சொல்லப்படுவனவும் உண்டோ?.

🌏 English Translations & Explanations

Explanation

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?.

Translation

Can any work be hard in very fact, If men use fitting means in timely act?.

English Couplet

Can any work be hard in very fact,If men use fitting means in timely act