பொருட்பால்
இடனறிதல்
Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam
Aakkam Palavun Tharum
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.
வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும். (மாறுபாடாவது
பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும். இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.
மாறுபாட்டுடன் கூடிய மனத்தினையுடைய வலிமை நிறைந்த அரசர்க்கு அரனைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பற்பல பயன்களைக் கொடுப்பதாகும்.
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.
Though skill in war combine with courage tried on battle-field, The added gain of fort doth great advantage yield.
Though skill in war combine with courage tried on battle-field,The added gain of fort doth great advantage yield