518

பொருட்பால்

தெரிந்து வினையாடல்

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.

Vinaik Kurimai Naatiya Pindrai

Avanai Adharkuriya Naakach Cheyal

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஒரு செயலில் ஈ.டுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.

பரிமேலழகர் உரை

வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க. (உயரச்செய்தலாவது

மணக்குடவர் உரை

இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக. இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.

Translation

As each man's special aptitude is known, Bid each man make that special work his own.

English Couplet

As each man's special aptitude is known,Bid each man make that special work his own