544

பொருட்பால்

செங்கோன்மை

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

Kutidhazheeik Kolochchum Maanila Mannan

Atidhazheei Nirkum Ulaku

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

சாலமன் பாப்பையா உரை

குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும். மு.வ உரை

பரிமேலழகர் உரை

குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார். (அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும் , அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை

குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு. இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.

Translation

Whose heart embraces subjects all, lord over mighty land Who rules, the world his feet embracing stands.

English Couplet

Whose heart embraces subjects all, lord over mighty landWho rules, the world his feet embracing stands