640

பொருட்பால்

அமைச்சு

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.

Muraippatach Choozhndhum Mutivilave Seyvar

Thirappaatu Ilaaa Thavar

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.

சாலமன் பாப்பையா உரை

செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

பரிமேலழகர் உரை

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார். (அக்கூறுபாடாவன

மணக்குடவர் உரை

அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார். இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று. Translation

🌏 English Translations & Explanations

Explanation

Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.

Translation

For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails.

English Couplet

For gain of end desired just counsel nought availsTo minister, when tact in execution fails