644

பொருட்பால்

சொல்வன்மை

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல்.

Thiranarindhu Solluka Sollai Aranum

Porulum Adhaninooungu Il

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.

பரிமேலழகர் உரை

சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான். (அத்திறங்களாவன

மணக்குடவர் உரை

சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை. தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்

🌏 English Translations & Explanations

Explanation

Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.

Translation

Speak words adapted well to various hearers' state; No higher virtue lives, no gain more surely great.

English Couplet

Speak words adapted well to various hearers' state;No higher virtue lives, no gain more surely great