727

பொருட்பால்

அவை அஞ்சாமை

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.

Pakaiyakaththup Petikai Olvaal Avaiyakaththu

Anju Mavankatra Nool

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.

பரிமேலழகர் உரை

பகையத்துப் பேடி கை ஓள்வாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல். (பேடி

மணக்குடவர் உரை

பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார். Translation

🌏 English Translations & Explanations

Explanation

The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

Translation

As shining sword before the foe which 'sexless being' bears, Is science learned by him the council's face who fears.

English Couplet

As shining sword before the foe which 'sexless being' bears,Is science learned by him the council's face who fears