754

பொருட்பால்

பொருள் செயல்வகை

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.

Araneenum Inpamum Eenum Thiranarindhu

Theedhindri Vandha Porul

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.

பரிமேலழகர் உரை

திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும். (செய்யுந்திறம்

மணக்குடவர் உரை

அறத்தையும் தரும்

🌏 English Translations & Explanations

Explanation

The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.

Translation

Their wealth, who blameless means can use aright, Is source of virtue and of choice delight.

English Couplet

Their wealth, who blameless means can use aright,Is source of virtue and of choice delight