785

பொருட்பால்

நட்பு

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.

Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan

Natpaang Kizhamai Tharum

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.

பரிமேலழகர் உரை

புணர்ச்சி பழகுதல் வேண்டா - ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் - இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும். (புணர்ச்சி

மணக்குடவர் உரை

நட்பாதற்குப் பலநாள் பழகுதல் வேண்டா

🌏 English Translations & Explanations

Explanation

Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.

Translation

Not association constant, not affection's token bind; 'Tis the unison of feeling friends unites of kindred mind.

English Couplet

Not association constant, not affection's token bind;'Tis the unison of feeling friends unites of kindred mind