808

பொருட்பால்

பழைமை

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்கம் நட்டார் செயின்.

Kelizhukkam Kelaak Kezhudhakaimai Vallaarkku

Naalizhukkam Nattaar Seyin

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

சாலமன் பாப்பையா உரை

நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

பரிமேலழகர் உரை

கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம். (பிழையாவன

மணக்குடவர் உரை

நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது. . Translation

🌏 English Translations & Explanations

Explanation

To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.

Translation

In strength of friendship rare of friend's disgrace who will not hear, The day his friend offends will day of grace to him appear.

English Couplet

In strength of friendship rare of friend's disgrace who will not hear,The day his friend offends will day of grace to him appear