818

பொருட்பால்

தீ நட்பு

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்.

Ollum Karumam Utatru Pavarkenmai

Sollaataar Sora Vital

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்.

பரிமேலழகர் உரை

ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும் கருமத்தை முடியாததாக்கிச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக. (முடியாதாக்குதல்

மணக்குடவர் உரை

தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை, நட்பென்று சொல்லுவதும் செய்யாராய் வீழவிடுக. இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.

Translation

Those men who make a grievous toil of what they do On your behalf, their friendship silently eschew.

English Couplet

Those men who make a grievous toil of what they doOn your behalf, their friendship silently eschew