849

பொருட்பால்

புல்லறிவாண்மை

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.

Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan

Kantaanaam Thaankanta Vaaru

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

சாலமன் பாப்பையா உரை

அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.

பரிமேலழகர் உரை

காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்

மணக்குடவர் உரை

அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்

🌏 English Translations & Explanations

Explanation

One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".

Translation

That man is blind to eyes that will not see who knowledge shows;- The blind man still in his blind fashion knows.

English Couplet

That man is blind to eyes that will not see who knowledge shows;-The blind man still in his blind fashion knows