862

பொருட்பால்

பகை மாட்சி

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.

Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan

Enpariyum Edhilaan Thuppu

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

சாலமன் பாப்பையா உரை

மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?.

பரிமேலழகர் உரை

அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன்

மணக்குடவர் உரை

சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்

🌏 English Translations & Explanations

Explanation

How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?.

Translation

No kinsman's love, no strength of friends has he; How can he bear his foeman's enmity?.

English Couplet

No kinsman's love, no strength of friends has he;How can he bear his foeman's enmity