880

பொருட்பால்

பகைத்திறம் தெரிதல்

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்.

Uyirppa Ularallar Mandra Seyirppavar

Semmal Sidhaikkalaa Thaar

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

சாலமன் பாப்பையா உரை

நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது. மு.வ உரை

பரிமேலழகர் உரை

செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக. (அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

பகைவரது தலைமையைக் கெடுக்க மாட்டாதார், அப்பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவார். இது பகை கொள்ளுங்கால் வலியாரோடு பகைகோடலாகா தென்றது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.

Translation

But breathe upon them, and they surely die, Who fail to tame the pride of angry enemy.

English Couplet

But breathe upon them, and they surely die,Who fail to tame the pride of angry enemy