96

அறத்துப்பால்

இனியவை கூறல்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்

Allavai Theya Aramperukum Nallavai

Naati Iniya Solin

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.

பரிமேலழகர் உரை

நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல்

மணக்குடவர் உரை

நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை ஆராய்ந்தறிந்து இனிமையானவற்றைச் சொல்லுவானானால், அவனுக்குத் தீமைகள் தேய்ந்து அறம் மிகுந்து வளரும்.

🌏 English Translations & Explanations

Explanation

If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

Translation

Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow.

English Couplet

Who seeks out good, words from his lips of sweetness flow;In him the power of vice declines, and virtues grow