419

பொருட்பால்

கேள்வி

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராதல் அரிது.

Nunangiya Kelviya Rallaar Vanangiya

Vaayina Raadhal Aridhu

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

சாலமன் பாப்பையா உரை

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

பரிமேலழகர் உரை

நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது. (கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.).

மணக்குடவர் உரை

நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை. இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.

Translation

'Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heard.

English Couplet

'Tis hard for mouth to utter gentle, modest word,When ears discourse of lore refined have never heard