420

பொருட்பால்

கேள்வி

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal

Aviyinum Vaazhinum En?

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

சாலமன் பாப்பையா உரை

செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

பரிமேலழகர் உரை

செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர், அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன? (செவியால் நுகரப்படும் சுவைகளாவன

மணக்குடவர் உரை

செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு. இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?.

Translation

His mouth can taste, but ear no taste of joy can give! What matter if he die, or prosperous live?.

English Couplet

His mouth can taste, but ear no taste of joy can give!What matter if he die, or prosperous live