546

பொருட்பால்

செங்கோன்மை

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

Velandru Vendri Tharuvadhu Mannavan

Koladhooung Kotaa Thenin

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான். மு.வ உரை

பரிமேலழகர் உரை

மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின். (கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க).

மணக்குடவர் உரை

அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின். இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.

Translation

Not lance gives kings the victory, But sceptre swayed with equity.

English Couplet

Not lance gives kings the victory,But sceptre swayed with equity