547

பொருட்பால்

செங்கோன்மை

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

Iraikaakkum Vaiyakam Ellaam Avanai

Muraikaakkum Muttaach Cheyin

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும். மு.வ உரை

பரிமேலழகர் உரை

வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். (முட்டாமல் செலுத்தியவாறு

மணக்குடவர் உரை

வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்; அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு. இது தனக்குக் காவலாம் என்றது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

Translation

The king all the whole realm of earth protects; And justice guards the king who right respects.

English Couplet

The king all the whole realm of earth protects;And justice guards the king who right respects