763

பொருட்பால்

படை மாட்சி

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.

Oliththakkaal Ennaam Uvari Ela�ppakai

Naakam Uyirppak Ketum

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

சாலமன் பாப்பையா உரை

பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.

பரிமேலழகர் உரை

எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம் - எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? நாகம் உயிர்ப்பக் கெடும் - அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும். (உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அதற்கு வீரன் அஞ்சான்

மணக்குடவர் உரை

கடல்போல ஒலித்தாலும் எலியினது மாறுபாட்டினால் வருந்தீமை யென்னுளதாம்; எலி நாகம் உயிர்த்த அளவிலே கெடும். இது படைமிகுத்தது வெல்லுமென்று கருதாது வீரரைத் தௌ¤ந்தாளல் வேண்டுமென்றது. Translation

🌏 English Translations & Explanations

Explanation

What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.

Translation

Though, like the sea, the angry mice send forth their battle cry; What then? The dragon breathes upon them, and they die!.

English Couplet

Though, like the sea, the angry mice send forth their battle cry;What then? The dragon breathes upon them, and they die