764

பொருட்பால்

படை மாட்சி

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை.

Azhivindri Araipokaa Thaaki Vazhivandha

Vanka Nadhuve Patai

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

சாலமன் பாப்பையா உரை

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.

பரிமேலழகர் உரை

அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்

மணக்குடவர் உரை

கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று. Translation

🌏 English Translations & Explanations

Explanation

That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).

Translation

That is a host, by no defeats, by no desertions shamed, For old hereditary courage famed.

English Couplet

That is a host, by no defeats, by no desertions shamed,For old hereditary courage famed